Pages

Monday 14 November 2016

விதுர நீதி - லுப்தம் அர்த்தேன க்ருஹணீயாத்

வாழ்க்கையில் நாம் பல வித மனிதர்களை சமாளிக்க வேண்டி இருக்கிறது.
சில ஸமயம், இவர்களை போன்றோர்களை சமாளித்து தான் நாம் நம் காரியங்களை செய்ய வேண்டி வரும்.
பேராசை கொண்ட சிலர், நம்மிடமிருந்து பணம் வாங்காமல்நியாயமான காரியங்களை கூட செய்ய மாட்டார்கள், நம்மையும் செய்ய விட மாட்டார்கள்.   

விதுரர் (சாக்ஷத் எம தர்மராஜன் அவதாரம்) நமக்கு இவர்களை போன்றோரை சமாளிக்க வழி சொல்கிறார்.

லுப்தம்  அர்த்தேன க்ருஹணீயாத்  !
க்ருத்தம்  அஞ்சலி கர்மணா !!
மூர்க்கம் சந்தானு ருத்தயா தத்வார்த்தேன பண்டிதம் !!
-விதுர நீதி

விரும்பியோ விரும்பாமலோ, உங்களின் ஒரு நியாயமான காரியம், ஒரு பேராசைகாரனால் தடைபடும்  போது, இப்படி பட்ட   
பேராசைகாரனை, கொஞ்சம் காசை கொடுத்து தான் சமாளிக்க முடியும். பணத்தை வாங்கி பின் நமக்கு உதவியாளன் போல கூட ஆகி விடுவான்.

விரும்பியோ விரும்பாமலோ, உங்களின் ஒரு  நியாயமான காரியம், ஒரு கோபக்காரனால் தடைபடும்  போது, இப்படி பட்ட
கோபக்காரனை, கொஞ்சம் பணிவால் தான் சமாளிக்க முடியும். கோபக்காரனை பணிவால் (அமைதியாக எதிர்த்து பேசாமல் இருந்தாலே) எளிதாக வசம் செய்ய முடியும்.

விரும்பியோ விரும்பாமலோ, உங்களின் ஒரு  நியாயமான காரியம், ஒரு முட்டாளால் தடைபடும்  போது, இப்படி பட்ட
மூடனை, அவனிடமே வழி கேட்டு, அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி (ஆமாம், நீங்கள் சொல்வதே சரி போன்று கூறி) தான் சமாளிக்க வேண்டும். மூடனுக்கு இது கிழக்கு என்றால், இல்லை மேற்கு என்பான். எதற்கும் முடிவில்லாமல் தர்க்கம் செய்வான். தான் சொன்னதே முடிவாக இருப்பான். மற்றவர் உண்மையை சொன்னாலும் மறுப்பான்இப்படி பட்ட மூடனை, அவனிடமே வழி கேட்டு, அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி தான் சமாளிக்க வேண்டும்.

ஆனால், விரும்பியோ விரும்பாமலோ, உங்களின் ஒரு  நியாயமான காரியம், ஒரு நல்லவனிடம், அறிவாளியிடம் தடைபடும்  போது, அவனை சமாளிக்க வேண்டிய அவசியமில்லை. அப்படிப்பட்ட அறிவாளியிடம் நீங்கள் உள்ளதை உள்ளபடி சொன்னாலே போதுமானது. அவர் உங்களின் நோக்கத்தை புரிந்து வழியும் காட்டுவார், முடிந்தால் உதவியும் புரிவார்

பேராசைக்காரனை பணத்தாலும், முன்கோபியைப் பணிவாலும்மூடனை அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டியும்புத்திசாலியை ஞானத்தின் சாரத்தாலும் வசப்படுத்தலாம்.

விதுரர் இவ்வாறு திருத்ராஷ்டனிடம் இந்த அறிவுரை (நீதி) கூறினார். திருத்ராஷ்டன் இதை கேட்ட பின், தான் எந்த வகை சேர்ந்தவன் என்று புரிந்திருப்பாரோ என்னவோ, நாம் எப்படி பழக வேண்டும் என்று நமக்கு புரிந்திருக்கும்.


ஹிந்துவாய் பிறந்ததால், வாழ்க்கையில் பலருடன் பழக, பல நீதிகளும் இது போன்று கிடைக்கிறது

No comments:

Post a Comment